Wednesday, July 27, 2011

விழிகளில் ஒரு வானவில்


விழிகளில் ஒரு வானவில் - சமீபத்தில் வெளிவந்த 'தெய்வத்திருமகள்' திரைப்படம் என்னுள் வரைந்த வானவில். ஆங்கிலத்தில் 'ஐ ஆம் சாம்' திரைப்படம் முன்பே பார்த்துவிட்டதால் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கம் சென்றேன்.  தெரிந்த கதையே என்றாலும் இத்திரைபடத்திற்கு  வலுவாய் துணை நின்றது விக்ரமின் நடிப்பும், பேபி சாரா வின் நடிப்பும் மட்டும் அல்ல ,  பாடல் வரிகளும் தான். இரவு நேர காட்சி என்றாலும், என் மனதில் வானவில்லாய்  பதிந்த பாடல் வரிகள்,  இங்கே தங்களின் பார்வைக்கும் ..


"உன்னை எண்ணி வாடுகிறேன் 
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன் 
அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன் 
அர்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழ்கிறேன் 
- வெண்ணிலவே வெண்ணிலவே "

வெண்ணிலவை தொலைத்த  வென்மேகமாகிறார்  கதாநாயகன் விக்ரம் . மனைவியின் வாசம் தன்னோடு இருப்பதற்காக அவர் உபயோகித்த  சுவெட்டரை அணிந்து கொள்கிறார். அதனால் தான் பிற்பாதியில் சென்னை வந்தும் அதே உடையுடன் காணப்படுகிறார். 'சிங்கம்' சந்தானம் இரண்டு மணி நேரம் அந்த சுவேட்டரை கலட்ட முயற்சித்தும் விக்ரம் மறுக்கிறார் .

"முன்பு ஒரு சொந்தம் வந்து 
மழை ஆனதே 
மழை நின்று போனால் என்ன 
மரம் தூவுதே "
- ஆரிரோ ஆராரிரோ 

பிரிந்த மனைவியின் துயரத்தை நிலாவின் மழழை மழையில் மறக்கிறார் விக்ரம். இதே போன்ற வரிகள் காதல் கொண்டேன் (உன்னை தோழி என்பதா) மற்றும் ராமன் தேடிய சீதை(மழை நின்ற பின்பும் தூறல் போல) பாடல் வரிகளில் வந்தாலும், இத்திறைபடத்திற்கு இந்த வரிகள் பொருத்தமாகவே அமைந்துள்ளன.

நீ வந்தாய் என் வாழ்விலே 
பூ பூத்தாய் என் வேரிலே 
நாளையே நீ போகலாம் 
என் ஞாபகம் நீ ஆகலாம் 
தேர் போன பின்னாலே 
வீதி என்னாகுமோ ?? 

செடியை பூ பூக்க வைத்தாலும் வேர்கள் மண்ணுக்குள் மறையும் (உள்ளம் கொள்ளை போகுதே) . வேர்களின் நிகழ்வுகள் கண்களுக்கு தெரிவதே இல்லை. இங்கே நாயகன் மேல் வந்த அன்பினை வேரில் பூத்த பூவாக சொல்கிறார் அனுஷ்கா. இது இயற்க்கைக்கு எதிரானதும் அல்ல... புதிதானதும் அல்ல.


நான் உனக்காக பேசினேன் 
யார் எனக்காக பேசுவார் ??
மௌனமாய் நான் பேசினேன் ...

'உன்னை நான் அறிவேன் ... என்னை அன்றி யார் அறிவார்' - குணா பாடல் வரிகள் போல் மிகவும் ஆழமான வரிகள். பிரிந்த தந்தையையும் மகளையும் சேர்ப்பதற்காக போராடுகிறார் வழக்கறிஞர் அனுஷ்கா. பேச்சுத் திறமையில் சிறந்தவர்களை கூட 'யார் எனக்காக பேசுவார்' என ஏங்க வைப்பது காதலும் அதன் வலியும் மட்டும் தான்.

நான் நேசிக்கும் கண்ணீர்..... 
இவன் நெஞ்சில்!!
என் தேரில் பூத்த பூவிது 
என் நெஞ்சில் வாசம் வீசுது 
மனம் எங்கும் மணம்.

கண்ணீரை யாரும் நேசிப்பதில்லை. அது நெஞ்சத்தில் இருந்து வீழ்வதில்லை. 
தந்தையின் அன்பிற்காக எங்கும் நாயகியால் , மகளின் அன்புக்காக உருகும் நாயகனின் சோகத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ளுதலில் வரும் சோகமும் சுகமே, வலிகளும் வரமே.

Monday, July 11, 2011

My First Copy Pass

நாலு வருசத்துக்கு முன்னாடி சென்னையில நடந்த என்னோட சொந்த கதை தான் இப்போ உங்களுக்கு சமர்ப்பணம். 'எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?' ன்னு 2007 ல நான் எம்.எஸ் சாப்ட்வேர் இன்ஜினியரிங் ல சேர்ந்தேன். ஜூலை மாசத்துல பர்ஸ்ட் செமஸ்டர் பரீட்ச்சை ஆரம்பிக்கும்ன்னு சொன்னாங்க. அந்த மோசமான பரீட்ச்சைகளிலேயே முக்கியமான பரீட்ச்சை னா அது Advanced Data Structures And Algorithm தான் . ஏன்னா அட்வான்சுடு நாலும் சரி அட்வைசு நாலும் சரி நமக்கு வேலைக்கு ஆகாது.   மாசா மாசம் நடந்த இடைத்தேர்வுகள் ல  எனக்கு 12/60 தான் இருந்தது . ஜூலை 22 அந்த பரீட்ச்சைக்காக  ஜூலை 1 ஆம் தேதி  நான் புக் வாங்குனேன். ஒரே பயம். எப்படியும் தேறாதுன்னு. ஒரே சோகம். அவசரப்பட்டு புக் வாங்கீட்டேன்னு.


இந்த பயத்துளையும் சோகத்துளையும் எனக்கு தூக்கமே வரல. இந்த எம் எஸ் பரீட்ச்சை எல்லாம் பரோட்டா சாப்புடுற போட்டி மாதிரி இருந்தா நாம முதல்ல இருந்து திரும்ப திரும்ப பண்ணீறலாம். ஆனா இந்த பரீட்ச்சையில கோட்டை விட்டா நம்ம டையமும் காசும் சேர்ந்து நஷ்டமாகும் . சேரி படிக்கலாம்ன்னு புக்க தொறந்தா 3D படத்த வெறும் கண்ணால பாக்குற மாதிரி ஒரு எப்பெக்ட். ஒரு தடவ படிச்சாலும் சரி, ஆயிரம் தடவ படிச்சாலும் சரி, தூக்கம் வராது ... தலை வலி தான் வரும். இந்த லட்ச்சனத்துல 4௦ க்கு 38 எடுத்தா தான் ஜஸ்ட் பாஸ் ஆக முடியும்ங்கற சூழ்நிலை. ஐஸ்வர்யா ராய் எப்படி நம்ம சுமார் மூஞ்சி  குமாருக்கு 'ஐ லவ் யு' சொல்லுறது சாத்தியமில்லையோ அதே மாதிரி நானும் பாஸ் ஆகுறது சாத்தியம் இல்லன்னு எனக்கு தோனுச்சு. உச்.. உச் .. உச் ...பாத்தீங்களா.... கவுளி கூட கத்துது . ஒ நீங்க பீல் பண்ணீங்களா?? தேங்க்ஸ் ங்க.

ஒரு வழியா அந்த பரீட்ச்சை  ஞாயித்து கிழமை மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பிச்சுது. நான் அடுத்த வருஷம் பாத்துக்கலாம்னு ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிட்டேன். அதனால தலை வலி மட்டும் வராம இருக்க தயாரா ஒரு ஹைதராபாத் பிரியாணி சாப்ட்டு பொறுமையா ரெண்டே கால் மணிக்கு போனேன். உள்ள நுழைஞ்ச உடனே ஒரு இன்ப அதிர்ச்சி. நான் ஆன்லைன் எக்ஸாம் எழுத சிஸ்டம் இல்ல . அங்க இருந்த சூபர்வைசர் என்னைய கடைசீல உள்ள சீட் ல ஒரு பொண்ணு பின்னாடி ஒக்கார சொன்னாரு. சார் .. உங்க ஜட்சுமென்ட் ரொம்ப தப்பு ன்னு நெனச்சிக்கிட்டே நான் அங்க போய் ஒக்காந்தேன்.  லைட்டா எட்டி பாத்தா அதே எக்ஸாம் தான் அந்த பொன்னும் எழுதிக்கிட்டு இருந்தாங்க. பழம் நழுவி பால்ல விழுந்து... அது நழுவி வாயில விழுந்து... பின்னாலே பாலோ பண்ணி ரெண்டு விரல் வந்து அத தொண்டையில தள்ளி விட்ட மாதிரி அன்னைக்கு எல்லாமே எனக்கு சாதகமாவே நடந்தது .

இந்த இடத்துல தான் ஒரு முக்கியமான சத்தியத்த நான் உடைக்க வேண்டி வந்திருச்சு. எக்ஸாம் ல காப்பி அடிக்க கூடாதுங்கறது என்னோட கொள்கை. ஸ்கூல், காலேஜ் காலத்துல எல்லாம் காப்பி அடிச்சதில்லை. ஒரு அஞ்சு நிமிஷம் யோசிச்சேன். நம்ம இளையதளபதி சொன்ன தங்கமான வரிகள் டக்குன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு... 'எக்ஸாம் எக்ஸாம் வந்தா... எஸ்கேப்பு பண்ணாத மாமா ... பேப்பர் ச்சேசோ... பிட்டு அடிச்சோ பாசப்பன்னம்மா '. அதனால அன்னைக்கு என் மூளைக்கு லீவ். அந்த பொண்ணு வேகமா எம் எஸ் வோர்டு ல டைப் பண்ணீட்டு இருந்தாங்க. கம்ப்யூட்டர் ல டைப் அடிக்கிறது எனக்கு அசால்ட்டா அல்வா சாப்பிடுரமாதிரி. முன்னாடி உள்ள மானிட்டர் ல கண்ண பிக்ஸ் பண்ணி, மனசு நிறைஞ்ச சந்தோசத்தோட, மன்னன் படத்துல ரஜினிகாந்த் 'காட்டு குயிலு மனசுக்குள்ள ' ன்னு கீபோர்ட் ல வாசிக்கிற மாதிரி டைப் பண்ணினேன் .  எதிர்பாக்காத நேரத்துல இடைவேளை விடுற மாதிரி அந்த பொண்ணு ரெண்டு மணி நேரத்துல  மூணு கேள்விக்கு மட்டும் பதில் எழுதி,  அப்லோடு பண்ணீட்டு போயிட்டாங்க.

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். கடைசி கேள்விக்கும் பதில் எழுதுனா தான் நான் பாஸ் ஆகுரதுக்கே சான்ஸ். 'வட போச்சே' ன்னு அப்செட் ஆகி உக்காந்திருக்கும் போது தான் ஆங்கிலத்திலையே முக்கியமான வார்த்தை எனக்கு ஞாபகம் வந்துச்சு... 'கான்பிடன்ஸ்'.  ஒரு மணி நேரம் ... ஒரு கேள்வி. ரெண்டுல ஒன்னு பாத்திரலாம்ன்னு நானே ட்ரை பண்ணுனேன். கரும்பு தோட்டத்துல புகுந்த கட்டெறும்பு மாதிரி அந்த பெரிய புக் ல நான் விடை தேடி அலைந்தேன்.. ஆமா .. அது ஓபன் புக் எக்ஸாம் தான்.  கடவுளுக்கு நன்றி சொல்லி... ஒரு வழியா எக்ஸாம் முடிச்சேன் . ஆனா ஜஸ்ட் பாஸ் இல்லேன்னா ஜஸ்ட் பெயில் ன்னு பரீட்ச்சை ரிசல்ட் சி-சா ஆடீட்டு இருந்துச்சு. ஒரு மாசம் அப்புறம் ரிசல்ட் வந்துச்சு... நான் ஈ கிரேடு . ஜஸ்ட் பாஸ். 
அப்புறம் என்ன? வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும் ..... பூங்காற்றே பூங்காற்றே பூ போல வந்தாள் இவள்....  சாங் ப்ளீஸ் ...